இனி மாதந்தோறும் மின் கட்டணம் கணக்கீடு - அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்! - Seithipunal
Seithipunal


ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்ட பிறகு மாதந்தோறும் மின் கட்டடணம் கணக்கிடும் முறை அமல்படுத்தப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

கடந்த இரு தினங்களாக பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் துணை மின் நிலையங்கள் சேதமடைந்தன. இதனால் பல இடங்களில் மின் விநியோகம் தடைபட்டதால் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகினர்.

இதனையடுத்து துணைமின் நிலையங்களில் சீரமைப்பு பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பட்டினப்பாக்கம் துணை மின் நிலையத்தில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் ஆய்வு செய்தால்.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னையில் பழுதடைந்த துணை மின் நிலையங்கள் சீரமைக்கப்பட்டு, இன்று மாலைக்குள் மின் விநியோகம் சீராகும் என்று கூறினார். பொதுமக்களுக்கு 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்கவேண்டுமென  முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்ட பின் மாதந்தோறும் மின் கணக்கிடும் முறை அமல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டால் துல்லியமாக மின் பயன்பாடு கணக்கெடுக்கப்படும் எனவும் வரும் 2025ம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகள் மற்றும் வணிக இடங்களில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

From now on monthly electricity bill calculation - Minister Thangam thennarasu


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->