#திருவண்ணாமலை || நேதாஜியின் படையில் பங்கேற்ற போர் வீரர், சுதந்திர விடுதலை போராட்ட தியாகி பி. ராஜதுரை மைக்கேல் (வயது 101) காலமானார்.! - Seithipunal
Seithipunal


நெல்லையை சேர்ந்த இந்திய சுதந்திர விடுதலை போராட்ட தியாகி பி. ராஜதுரை மைக்கேல் (வயது 101) வயது முதிர்வு காரணமாக இன்று காலமானார்.

தியாகி பி. ராஜதுரை மைக்கேல் குடும்பம் திருநெல்வேலி மாவட்டத்தை பூர்விகமாக கொணடது. ஆனால், இவர் திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் பிறந்தவர். 

இளமை காலத்தில் நேதாஜியின் படையில் இணைந்த தியாகி பி. ராஜதுரை மைக்கேல், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு 3 முறை சிறை சென்றுள்ளார். 

ஆங்கிலேயரின் அன்றைய ஆட்சிக் காலத்தில் போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டிலிருந்து தப்பிய தியாகி பி. ராஜதுரை மைக்கேல்,  மொரார்ஜி தேசாய், சஞ்சீவரெட்டி, கக்கன், விஷ்ணுராம் மேதி, அறிஞர் அண்ணா உள்ளிட்டோருடன் நெருக்கமன பழக்கம் கொண்டவர்.

சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கான தாமிரப்பட்டயமும் பெற்ற தியாகி பி. ராஜதுரை மைக்கேல், திருச்சியில் உள்ள தனது மகளின் வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில், வயது முதிர்வால் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக நேற்று மாலை தியாகி பி. ராஜதுரை மைக்கேல் காலமானார்.

அவரின் இறுதிச் சடங்கு இன்று பிற்பகல் திருச்சி பொன்னகர் 5-ஆவது குறுக்குத் தெருவில் உள்ள இல்லத்தில் நடத்தப்பட்டு ஓயாமரி மின்மயானத்தில் உடல் தகனம் செய்யப்படவுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

freedom fighter Rajadurai Michel Pass Away


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->