"தோல்வி ஒரு முடிவல்ல; புதிய தொடக்கம்!" அண்ணாமலை வெளியிட்ட வாழ்த்து செய்தி! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் இன்று காலை 9.30 மணிக்கு பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி, லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலக் கனவுகளுக்கு உயிர் கொடுத்துள்ளன. இந்த முக்கியமான நாளில், தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள், தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தின் வாயிலாக மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையிலான வாழ்த்துச் செய்தியைப் பகிர்ந்துள்ளார்.

அதில், "பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்று, அடுத்த கட்டமான, கல்லூரிக் கல்வியை நோக்கி முன்னேறவுள்ள அனைத்து மாணவ மாணவியருக்கும், என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.

திறமைகளுக்கும், கனவுகளுக்கும் எண்ணற்ற வாய்ப்புகள் உருவாகியிருக்கும் இந்த காலத்தில், தாங்கள் விரும்பும் துறையில் கல்வி கற்று, சமுதாயத்திற்கு பயனுள்ள சாதனையாளர்களாக உயர வேண்டும் என வாழ்த்துகிறேன். தேர்வில் எதிர்பார்த்த முடிவை பெறாத மாணவர்கள் மனம் தளர வேண்டாம்.

தோல்வி என்பது முடிவு அல்ல; அது இன்னொரு முயற்சிக்கான தொடக்கம். நம்பிக்கையுடனும் கடின உழைப்புடனும் மீண்டும் முயன்று, வெற்றி பெற வாழ்த்துக்கள். ஒவ்வொரு மாணவரின் எதிர்காலமும், சிறப்பாக அமைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Failure is Not the End But a New Beginning Annamalai Inspires Plus 2 Students


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..


செய்திகள்



Seithipunal
--> -->