'எல்லோரையும் எல்லா நாளும் ஏமாற்ற முடியாது' தமிழக உரிமைகள் பறிபோகிறது: அப்பாவு கடும் விமர்சனம்! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் த.வெ.க ஆட்சி அமைந்தது முதலே மாநில உரிமைகள் தொடர்ந்து பறிபோய் வருவதாகவும், முதலமைச்சர் விஜய்யின் மெத்தனப் போக்கினால் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாட்டின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் கைநழுவிச் செல்வதாகவும் முன்னாள் திமுக சபாநாயகர் அப்பாவு மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நவோதயா பள்ளிகள் அமைப்பதற்கான இடத்தைத் தேர்வு செய்யக் கோரியும், இந்தி மொழியைக் கற்கக் கூடாது என்ற குறுகிய மனநிலையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருப்பது தமிழகத்திற்கு ஒன்றும் புதிய ஆச்சரியமல்ல எனக் குறிப்பிட்டுள்ளார். மேகதாது அணை விவகாரம் மற்றும் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றும் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில், த.வெ.க அரசின் முறையற்ற அணுகுமுறையால் தமிழர்களின் உரிமைகள் தொடர்ந்து தாரைவார்க்கப்பட்டு வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.

மேலும், மத்திய அரசின் நன்மதிப்பைப் பெறுவதற்காகவே உச்ச நீதிமன்றத்தில் தகுந்த ஆதாரங்களுடன் வாதிடாமல் தமிழகத்தின் தன்னாட்சியை முதலமைச்சர் விஜய் அடகு வைத்துவிட்டதாக அப்பாவு சாடியுள்ளார். ஒன்றிய அரசு தர வேண்டிய கல்வி நிதியைக் கேட்டுப் பெறாமல் மௌனம் சாதிப்பது, பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் மத்திய அரசின் முடிவுக்கு தலையசைப்பது எனத் தொடர்ந்து த.வெ.க அரசு மத்திய பா.ஜ.க அரசுடன் சரணாகதி அடைந்துள்ளதாகச் சீறியுள்ளார்.

சுற்றியிருக்கும் குறிப்பிட்ட சில அதிகாரக் குழுக்களின் துணையோடு, ஆட்சி மற்றும் அதிகார மோகத்தில் பா.ஜ.க-வின் மறைமுக ஆதரவோடு இயங்கும் த.வெ.க-விற்குத் தமிழ்நாட்டின் மீது எவ்விதப் பற்றும் இல்லை என்றும், 'எல்லோரையும் எல்லா நாளும் ஏமாற்ற முடியாது' என்ற வகையில் தமிழக மக்கள் இத்தகைய மக்கள் விரோத ஆட்சியை அடையாளம் கண்டு தகுந்த பாடம் புகட்டத் தயாராகிவிட்டனர் என்றும் தனது அறிக்கையில் அப்பாவு காட்டமாகத் தெரிவித்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ex-DMK Speaker Appavu Critiques CM Vijay Over Surrendering Tamil Nadus Rights in Supreme Court


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->