புதிய கட்சி தொடங்கும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முக்கிய புள்ளி! - Seithipunal
Seithipunal


குலாம் நபி ஆசாத், காங்கிரஸ் கட்சியை விட்டு கடந்த மாதம் 26-ம் தேதி விலகினார். இதனை தொடர்ந்து, புதிய அரசியல் கட்சியை ஆரம்பிக்க உள்ளதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில், காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள பாரமுல்லா நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

இக்கூட்டத்தில், பாரமுல்லா மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும், இக்கூட்டத்தில் அப்னி கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர்கள் 8 பேர் தங்கள் பதவியை ராஜினமா செய்துவிட்டு குலாம் நபி ஆசாத்திற்கு ஆதரவாக கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பேசிய குலாம் நபி ஆசாத், இன்னும் 10 நாட்களில் கட்சியின் பெயர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். இதற்கு முன்னதாக குலாம் நபி ஆசாத் நேற்று அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்டி இருந்தார்.

 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்‌ தெரிவித்ததாவது,

"ஜம்மு பிராந்தியத்தின் 35 சட்டமன்றத் தொகுதிகளில் இருந்து பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மேலும், நான் ஆரம்பிக்க உள்ள கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.‌ காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது எனக்கு இருந்த ஆதரவைக் காட்டிலும் தற்போது 4 மடங்கு ஆதரவு பெருகி இருக்கிறது.

நான் ஆரம்பிக்க உள்ள கட்சியின் பெயர் உருது வார்த்தைகளைக் கொண்டதாகவோ அல்லது சமஸ்கிருத வார்த்தைகளைக் கொண்டதாகவோ இருக்காது. மக்கள் அனைவருக்கும் புரியும்படியான இந்திய பெயராக தான் அது இருக்கும். 

இந்த புதிய கட்சி, ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்தை பெற்றுத் தருவது, மக்களுக்கான நில உரிமையை மீட்டுத் தருவது, வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவது ஆகியவற்றில் கவனம் செலுத்தும்". என்று தெரிவித்திருந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ex Congress Ghulam Nabi Azad new party


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->