ஈரோடு இடைத்தேர்தல்.. பெரியார் நகர் பகுதியில் அதிமுக - திமுகவினர் இடையே தகராறு.! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவேரா கடந்த டிசம்பர் 4ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானதை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து இன்று (பிப்ரவரி 27ஆம் தேதி) ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதனிடையே வேட்புமனு மற்றும் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்து இறுதியாக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 75 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.  இதனையடுத்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலையொட்டி சுமார் 20 நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற பிரச்சாரம் நேற்று முன்தினம் நிறைவடைந்தது.

இந்த இடைத்தேர்தலுக்காக 52 இடங்களில் 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி காலை 7:00 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில் பொதுமக்கள் வரிசையில் நின்று ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பெரியார் நகர் பகுதியில் வாக்குச்சாவடிக்கு முன்பாக அதிமுக-திமுகவின் இடையே கடும் வாய்த்தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியுள்ளது. இதனிடையே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இரு தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Erode by-election Dispute between AIADMK and DMK in Periyar Nagar


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->