திடீரென உதயநிதியின் காரை நோக்கிச் சென்ற இபிஎஸ்...! நொடிக் பொழுதில் சுதாரித்த பாதுகாவலர்கள்...! - பேரவையில் செம சிரிப்பலை...!
EPS suddenly headed towards Udhayanidhi car security guards intervened split second There lot laughter assembly
தமிழக சட்டப்பேரவையில் இன்று 2026–27-ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவை நடவடிக்கைகள் நண்பகல் 12.30 மணியளவில் நிறைவடைந்தன. இதையடுத்து அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்கள் அனைவரும் சட்டப்பேரவை வளாகத்திலிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

அப்போது, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பின்னர், வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனம் ஒன்றில் ஏறுவதற்காக சென்றார். அந்த நேரத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள், அது அவருடைய வாகனம் அல்ல என்றும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பயன்படுத்தும் வாகனம் என்றும் தெரிவித்தனர்.
இதைக் கேட்ட எடப்பாடி பழனிசாமி புன்னகையுடன் தனது தவறை உணர்ந்து, அந்த வாகனத்தில் ஏறாமல் விலகினார். பின்னர், தனது வாகனத்துக்குச் சென்று அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இந்தச் சிறிய நிகழ்வு சட்டப்பேரவை வளாகத்தில் இருந்தவர்களிடையே சில நிமிடங்கள் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவம் இதற்கு முன்பும் அரங்கேறியிருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் 12-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத் தொடர் நிறைவடைந்த பின்னரும், ஒரே நிறத்தில் இருந்த வாகனங்கள் காரணமாக எடப்பாடி பழனிசாமி தவறுதலாக வேறு வாகனத்தை நோக்கிச் சென்றிருந்தார்.
அப்போதும் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, புன்னகையுடன் தனது வாகனத்தை நோக்கி திரும்பிச் சென்றார்.தற்போது, அதேபோன்ற சூழ்நிலை மீண்டும் நிகழ்ந்திருப்பது சட்டப்பேரவை வளாகத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
English Summary
EPS suddenly headed towards Udhayanidhi car security guards intervened split second There lot laughter assembly