தமிழகத்தில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி.!! தீர்ப்புக்குப் பின் அழுத்தமாக கூறிய ஈபிஎஸ்.!! - Seithipunal
Seithipunal


ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 4 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் மற்றும் முகமது சபீக் தலைமையிலான அமர்வு அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதால் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் செல்லும், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டதும் செல்லும் என தீர்ப்பு வழங்கியது.

இந்த நிலையில் சேலத்தில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் "நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு நீதி தர்மம் உண்மைக்கு கிடைத்த வெற்றி. அதனை நீதிமன்றம் இன்று அங்கீகரித்துள்ளது என பதிலளித்தார்.

இந்த தீர்ப்பால் அதிமுக பலம் பெறுமா என கேள்வி எழுப்பியதற்கு ஏற்கனவே அதிமுக பலமாகத்தான் உள்ளது, எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் அதிமுக மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும். தேசிய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுக தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும்.

இது வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என கூறினார். சசிகலா பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது தொடர்பான வழக்கின் தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில் அது குறித்தான கேள்விக்கு பதில் அளித்த இடப்பாடி பழனிச்சாமி "சசிகலா தொடர்ந்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள போது அது குறித்து எந்த கருத்தும் கூற முடியாது. நீதிமன்ற தீர்ப்பு வெளியான பிறகு அது குறித்து பேசலாம்" என செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EPS strongly stated after verdict ADMK led alliance in TN


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->