டிடிவி தினகரனிடம் மீண்டும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை.! - Seithipunal
Seithipunal


ஆர்கே நகர் இடைத் தேர்தலின் போது தேர்தல் ஆணையம் முடக்கிய இரட்டை இலை சின்னத்தை பெற அதிகாரி சுகேஷ்சந்திர சேகரிடம் டிடிவி தினகரன் லஞ்சம் கொடுத்ததாக டெல்லி போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக டிடிவி தினகரன் கைது செய்தி செய்யப்பட்டு, பின்னர் விடுகிக்கப்பட்டார். 

வழக்கு விசாரணை டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அதன்படி, லஞ்சம் கொடுத்ததை நேரில் பார்த்ததாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கோபிநாத், மோகன்ராஜ் வாக்குமூலம் அளித்தார். வழக்கறிஞர் கோபிநாத் மோகன்ராஜ் ஆகியோருக்கு சம்மன் அனுப்பியது.

இதனிடையே, இவ்வழக்கில் முக்கிய திருப்பமாக வழக்கறிஞர் கோபிநாத் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து சென்னை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த நிலையில், இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படும் வழக்கில் டிடிவி தினகரன், டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் கடந்த 12-ந்தேதி ஆஜராகினர். அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் 11 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் தினகரனிடம் மீண்டும் விசாரணை நடத்த அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து அவருக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது.

இந்நிலையில், டி.டி.வி. தினகரன் மீண்டும் டெல்லியில் உள்ள அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் சட்ட விரோத பணபரிமாற்றம் தொடர்பாகவும், சுகேஷ் சந்திரசேகர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

enforcement dept case for ttv dinakaran 22 april


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->