நாளை முக்கிய இடத்திற்கு படையெடுக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!!  - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரத்தில் அத்திவரதர் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலித்து கொண்டுள்ளார். இந்த விழா ஜூலை 1ஆம் தேதி தொடங்கி ஆகஸ்டு 17ஆம் தேதி வரை 48 நாட்கள் நடைபெறுகிறது தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசித்து வரும் நிலையில். சாமி தரிசனத்துக்கு வரும் பக்தர்களின் வசதிகாக்க, ஓய்வெடுக்க வசதி, மருத்துவ முகாம், தரிசனத்துக்காக நீண்ட நேரம் வரிசையில் நிற்கும் பக்தர்களுக்கு குடிநீர், பிஸ்கட், மோர் கொடுக்க ஏற்பாடு உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் பக்தர்களுக்காக அரசு சார்பில் செய்யப்ட்டுவருகின்றது. 

கடந்த சில நாடுகளுக்கு முன் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் காஞ்சிபுரம் வந்து அத்திவரதரை தரிசனம் செய்து சென்றார். இதே போலவே முன்னணி அரசியல் கட்சி தலைவர்கள், முன்னாள், இன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் , அமைச்சர்கள் என அனைத்து தரப்பினரும் காஞ்சிபுரம் வந்து அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர். 22வது நாளான இன்று மதிய நிலவரப்படி சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்துள்ள நிலையில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனத்துக்கு வரிசையில் நின்று காத்து கிடக்கின்றனர். நடந்து முடிந்த 22 நாட்களில் மொத்தம் 33 லட்சத்து மேற்பட்டோர் தரிசனம் செய்துள்ளனர்

இந்தநிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அத்திவரதரை தரிசிக்க நாளை காஞ்சிபுரம் செல்கிறார். முதல்வரின் வருகை ஒட்டி காஞ்சிபுரத்தில் இன்று முதலே போலீஸ் சார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

edappadi palanisamy going to athivarathar temple


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->