வாக்காளர் பட்டியல் திருத்தம்: தமிழகத்தில் 95.78% SIR படிவங்கள் விநியோகம்!
ECI Special Intensive Revision SIR 2026 Tamilnadu Assembly Election
வரும் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் (Special Intensive Revision - SIR) பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று (நவம்பர் 22) மதியம் 3 மணி வரை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி:
தமிழ்நாடு: தமிழகத்தில் மொத்தம் 6.41 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் இதுவரை 6.14 கோடி வாக்காளர்களுக்கு (95.78%) SIR விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
மற்ற மாநிலங்களின் நிலை
லட்சத்தீவு மற்றும் கோவா ஆகிய யூனியன் பிரதேசங்கள் மற்றும் மாநிலங்களில் 100 சதவீத படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
மேலும், பின்வரும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 99% க்கும் அதிகமான படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன:
அந்தமான் நிக்கோபார் தீவுகள்
சத்தீஸ்கர்
குஜராத்
மத்தியப் பிரதேசம்
ராஜஸ்தான்
உத்தரப் பிரதேசம்
மேற்கு வங்காளம்
ஒட்டுமொத்தமாக இந்த 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 50.45 கோடிக்கும் அதிகமான SIR படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேற்கு வங்காளத்திலும் தேர்தலுக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
English Summary
ECI Special Intensive Revision SIR 2026 Tamilnadu Assembly Election