பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த உ.பி. தொழிலாளர்கள் கைது!
Indian Navy spy arrested Pakistan
இந்திய கடற்படைக் கப்பல்கள் தயாரிக்கப்படும் கொச்சி கப்பல் கட்டும் தளத்தின் ரகசியத் தகவல்களைப் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ரோஹித் (20) மற்றும் சாண்ட்ரி (37) ஆகிய இருவரை கர்நாடகக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரும் கொச்சி கப்பல் கட்டும் தளத்தின் மல்பே பிரிவில் பணியாற்றி வந்தனர்.
புகார்: கப்பல் கட்டும் தளத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அளித்த புகாரின் பேரில், ரகசியத் தகவல்கள் வெளியாவதாகக் கண்காணித்த போலீஸார், இருவரையும் கைது செய்தனர். இதில் ரோஹித் முக்கியக் குற்றவாளியாகச் செயல்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
உளவு பார்த்த விவரங்கள்
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக ரோஹித் தனது கூட்டாளி சாண்ட்ரியுடன் இணைந்து ரகசிய விவரங்களைப் பாகிஸ்தானுக்கு அளித்து வந்துள்ளார்:
இந்திய கடற்படைக் கப்பல்களின் ரகசியப் பட்டியல் மற்றும் அவற்றின் அடையாள எண்கள்.
மத்திய அரசின் கீழ் உள்ள துறைமுகங்கள் மற்றும் கப்பல் கட்டும் தளத்தின் நடவடிக்கைகள்.
கடற்படைக் கப்பல்கள் தொடர்பான விவரங்கள்.
ரோஹித் மல்பே பிரிவுக்கு மாற்றப்பட்ட பின்னரும், சாண்ட்ரியிடம் இருந்து தகவல்களைப் பெற்று வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் மூலம் பாகிஸ்தானுக்குப் பகிர்ந்துள்ளார் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். கொச்சின் கப்பல் கட்டும் தளம் இந்தியக் கடற்படைக் கப்பல்களைத் தயாரிக்கும் முக்கிய இடம் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Indian Navy spy arrested Pakistan