தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை: 5 பேர் கொண்ட குழு அமைத்த காங்கிரஸ்! ப. சிதம்பரம் வரவேற்பு!
Five member committee DMK Congress Alliance P Chidambaram
2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தி.மு.க. உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுடன் கலந்துரையாடலைத் தொடங்குவதற்காக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஐந்து பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை நியமித்துள்ளார். இந்த முடிவை காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் வரவேற்றுள்ளார்.
ஐந்து பேர் குழு விவரம்:
காங்கிரஸ் தமிழகப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இந்தக் குழுவில் பின்வருவோர் இடம்பெற்றுள்ளனர்:
தமிழக காங்கிரஸ் தலைவர் கு. செல்வப்பெருந்தகை (எம்.எல்.ஏ.)
சட்டப்பேரவைக் காங்கிரஸ் கட்சித் தலைவர் செ. இராஜேஷ்குமார் (எம்.எல்.ஏ.)
காங்கிரஸ் செயலாளர்கள் சூரஜ் எம்.என். ஹெக்டே
நிவேதித் ஆல்வா
ப. சிதம்பரத்தின் கருத்து
காங்கிரஸ் தலைமை எடுத்த இந்த முடிவைப் ப. சிதம்பரம் தனது எக்ஸ் (X) பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலைக் கருதி தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்குக் காங்கிரஸ் தலைமை ஐந்து உறுப்பினர் குழுவை நியமித்திருப்பதை வரவேற்கிறேன். இந்தியா கூட்டணியின் ஒற்றுமையை இந்த அறிவிப்பு வலியுறுத்துகிறது. மேலும், அரசல் புரசலாக அவ்வப்போது வெளியிடப்படும் செய்திகளுக்கு இந்த அறிவிப்பு முடிவு கட்டும் என்று நம்புகிறேன்." என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Five member committee DMK Congress Alliance P Chidambaram