காதல் என்பது உணர்வு, நடிப்பு அல்ல...! – பாக்யஸ்ரீ போர்ஸ் பகிர்ந்த காதல் கதையின் உண்மை!
Love feeling not an act truth love story shared by Bhagyashree Pors
துல்கர் சல்மானின் காந்தா படத்தில் தனது தீவிரமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த பாக்யஸ்ரீ போர்ஸ், தற்போது ராம் பொதினேனிக்கு ஜோடியாக ஆந்திரா கிங் தாலுகா திரைப்படத்தில் மறுபடியும் கவனத்தை கவர உள்ளார்.
சமீபத்தில் வெளியான நேர்காணலில், படத்தைப் பற்றிய தனது அனுபவங்களை திறந்த மனதுடன் பகிர்ந்த அவர், “இந்த படத்தில் வரும் காதல் கதை மிகுந்த சுத்தமானது, உள்ளத்தைக் கொஞ்சும் உண்மையான உணர்ச்சி நிறைந்தது.

காதலில் நாம் உணரும் மிக நெகிழ்வான அந்த இனிய அலைபாய்வை இந்தப் படம் அழகாக சித்தரிக்கிறது” என்று கூறினார்.மகேஷ் பாபு பி இயக்கத்தில், மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள ஆந்திரா கிங் தாலுகா, வெளியீட்டுக்கு முன்பே ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறது.
இந்த படம் வரும் 27-ஆம் தேதி, உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெகுவிமர்சனத்துடன் திரையரங்கைக் கலக்கத் தயாராக உள்ளது.
English Summary
Love feeling not an act truth love story shared by Bhagyashree Pors