நல்லதே நடக்கும்…dont worry ...! ஜனநாயகன் ரிலீஸ் சிக்கலில் விஜய்க்கு நடிகர் சிபி சத்யராஜ் ஆதரவு
Good things happen dont worry Actor Sibiraj Sathyaraj extends support Vijay amidst jananaayagan release issues
இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘ஜனநாயகன்’. அரசியலில் முழுமையாக கவனம் செலுத்துவதற்காக, நடிகர் விஜய் சினிமாவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள நிலையில், அவரின் இறுதி திரைப்படமாக ‘ஜனநாயகன்’ கருதப்படுவதால், இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் அளவற்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வருகிற ஜனவரி 9-ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக அனைத்து தொழில்நுட்ப பணிகளும் முடிக்கப்பட்டு, கடந்த மாதமே படம் தணிக்கை வாரியத்திற்கு அனுப்பப்பட்டது.
ஆனால், எதிர்பார்த்தபடி இதுவரை தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாததால், படத்தின் வெளியீடு கேள்விக்குறியாகியுள்ளது.இந்த நிலையில், தணிக்கை சான்றிதழ் வழங்க தாமதம் ஏற்பட்டதை எதிர்த்து, படத்தை தயாரித்த கே.வி.என். நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை நேற்று விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, ‘ஜனநாயகன்’ படத்திற்கான தணிக்கை சான்றிதழ் தொடர்பான தீர்ப்பு நாளை (9-ஆம் தேதி) வழங்கப்படும் என உத்தரவிட்டுள்ளது.
இதன் காரணமாக, திட்டமிட்டபடி ஜனவரி 9-ஆம் தேதி ‘ஜனநாயகன்’ வெளியாகாது என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், திரையுலக பிரபலங்கள் பலரும் ‘ஜனநாயகன்’ படத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் சிபி சத்யராஜ், விஜய்க்கு ஆதரவாக தனது எக்ஸ் (X) பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில்,“ஜனநாயகன் ரிலீஸைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும், ஒரு மாபெரும் வெற்றிக்கான சரியான களத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. நம்பிக்கையுடன் இருங்கள்… நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்!”என்று பதிவிட்டு ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்துள்ளார்.விஜயின் கடைசி படம் எப்போது திரைக்கு வரும்? – தீர்ப்பு வெளியாகும் நாளைக்காக திரையுலகமும் ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
English Summary
Good things happen dont worry Actor Sibiraj Sathyaraj extends support Vijay amidst jananaayagan release issues