'பராசக்தி’ - மொழிப் போரின் முழக்கம்! டிரெய்லர் சாதனைக்கு பின் யுவன் குரலில் ‘சேனைக்கூட்டம்’ பாடல் வெளியீடு
Parasakti clarion call language movement Following trailers success song Senaikootam released Yuvans voice
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘பராசக்தி’ தற்போது திரையுலகில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. சிவகார்த்திகேயனின் 25-வது திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தில், ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேலும், இந்தி திணிப்புக்கு எதிரான மொழி உரிமைப் போரையே மையமாகக் கொண்டு, சமூக அரசியல் பின்னணியுடன் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு, ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
கடந்த ஜனவரி 5-ஆம் தேதி வெளியான ‘பராசக்தி’ டிரெய்லர், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், 53 மில்லியன் பார்வைகளை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.
சமூக வலைதளங்களில் இந்த டிரெய்லர் வைரலாகி, படத்தின் எதிர்பார்ப்பை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.இந்த பரபரப்பான சூழலில், தற்போது ‘பராசக்தி’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘சேனைக்கூட்டம்’ பாடல், யுவன் சங்கர் ராஜாவின் குரலில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், மொழி உரிமையும் போராட்ட உணர்வும் ஒன்றிணைந்த இந்த பாடல், ரசிகர்களிடையே வீர உணர்வை தூண்டும் பாடலாக பெரும் கவனம் பெற்றுள்ளது.
English Summary
Parasakti clarion call language movement Following trailers success song Senaikootam released Yuvans voice