வாக்காளர் பட்டியலில் அதிரடி சுத்தம்...! 9 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் 6.5 கோடி பெயர்கள் நீக்கம்...! - Seithipunal
Seithipunal


பீகாருக்குப் பிறகு 2-ஆம் கட்டமாக, தமிழ்நாடு, குஜராத், ராஜஸ்தான், கேரளா, கோவா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்தீஷ்கர், மேற்கு வங்காளம் ஆகிய 9 மாநிலங்களிலும், அந்தமான்–நிகோபார் தீவுகள், லட்சத்தீவுகள், புதுச்சேரி ஆகிய 3 யூனியன் பிரதேசங்களிலும், கடந்த அக்டோபர் 27 முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், தேர்தல் ஆணையம் வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியல்கள் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, 9 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 6.5 கோடி வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

இதனால், முன்னதாக 50.90 கோடியாக இருந்த மொத்த வாக்காளர் எண்ணிக்கை, தற்போது 44.40 கோடியாக குறைந்துள்ளது.இதில் தமிழ்நாட்டில் மட்டும் 97 லட்சத்து 37 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம், உத்தரப் பிரதேசத்தில் அதிகபட்சமாக 2.89 கோடி வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.இந்த நீக்கங்கள் குறித்து விளக்கம் அளித்துள்ள தேர்தல் ஆணையம், இரட்டைப் பதிவுகள், நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

ஆனால், தகுதியுள்ள வாக்காளர்களின் பெயர்களும் திட்டமிட்டு நீக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன.இதனிடையே, நீக்கப்பட்ட வாக்காளர்களின் முழு விவரங்களையும் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, தேர்தல் ஆணையம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

massive cleanup voter list 6point5 crore names removed 9 states and 3 Union Territories


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->