விஜய்யின் ‘ஜனநாயகன்’ ஐரோப்பாவில் ஒத்திவைப்பு – 39 நாடுகளில் ஜனவரி 9ல் வெளியீடு இல்லை!அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகன்’ படம், ஜனவரி 9ஆம் தேதி 39 நாடுகளில் வெளியாகாது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் இப்படத்தை வெளியிடும் ஆர்எப்டி பிலிம்ஸ் (RFT Films) நிறுவனம் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின், நார்வே, ஸ்வீடன், நெதர்லாந்து, போர்ச்சுகல், போலந்து, அயர்லாந்து உள்ளிட்ட மொத்தம் 39 ஐரோப்பிய நாடுகளில் ஜனநாயகன் திரைப்படம் திட்டமிட்டபடி ஜனவரி 9ஆம் தேதி வெளியாகாது. படம் ஒத்திவைக்கப்படுவதாகவும், புதிய வெளியீட்டு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒத்திவைப்புக்குக் காரணமாக, மத்திய தணிக்கை வாரியம் (CBFC) இதுவரை படத்திற்கு தணிக்கை சான்றிதழ் (Censor Certificate) வழங்காதது குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி 9ஆம் தேதி தமிழகம் உட்பட உலகம் முழுவதும் வெளியாக திட்டமிடப்பட்டிருந்த நிலையில், சென்சார் சான்றிதழ் தாமதம் காரணமாக தற்போது வெளியீடு பாதிக்கப்பட்டுள்ளது.

படத்தயாரிப்பு நிறுவனம், கடந்த டிசம்பர் 18ஆம் தேதியே தணிக்கைக்காக விண்ணப்பித்தும், இன்னும் சான்றிதழ் வழங்கப்படவில்லை எனக் கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த மனுவில், “ஒரு தணிக்கை குழு உறுப்பினர் புகார் அளித்ததன் காரணமாக, சட்ட விதிகளை மீறி சான்றிதழ் வழங்க மறுக்கப்படுகிறது. இந்தப் படத்திற்காக சுமார் 500 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ள நிலையில், திட்டமிட்ட தேதியில் படம் வெளியாக வேண்டும்” என வாதிடப்பட்டது.

இதற்கு பதிலளித்த தணிக்கை வாரியம், “படத்தை மறு ஆய்வு செய்ய தணிக்கை குழுவுக்கு முழு அதிகாரம் உள்ளது. அந்த நடைமுறை முடிந்த பிறகே சான்றிதழ் வழங்கப்படும்” என நீதிமன்றத்தில் தெரிவித்தது. இரு தரப்பின் வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கை ஜனவரி 9ஆம் தேதி இறுதி தீர்ப்புக்காக ஒத்திவைத்துள்ளார்.

இந்த நிலையில், நீதிமன்ற தீர்ப்பு வெளியாகும் வரை ஐரோப்பிய நாடுகளில் ஜனநாயகன் திரைப்படத்தின் வெளியீடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றமும், அதே நேரத்தில் தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் சூழலும் உருவாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vijay Jananayakan postponed in Europe No release on January 9 in 39 countries Official announcement


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->