'ஜனநாயகன்’ ரிலீஸ் முன் சாத்தான்குளத்தில் பரபரப்பு! - 60 அடி விஜய் பேனர் அகற்றியதில் சர்ச்சை - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘ஜனநாயகன்’, வரும் 9-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. தமிழகம் முழுவதும் பல திரையரங்குகளில் இந்த படத்திற்கான டிக்கெட்டுகள் மின்னல் வேகத்தில் விற்றுத் தீர்ந்து வருகின்றன.

இந்த சூழலில், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் உள்ள ஒரு தனியார் திரையரங்கில், ஜனவரி 9-ஆம் தேதி காலை 9 மணிக்கு விஜய் ரசிகர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்காக இலவச ரசிகர் மன்ற காட்சி திரையிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் சரவணன் ஏற்பாடு செய்திருந்தார்.இதற்கான விளம்பரப் பணிகளின் ஒரு பகுதியாக, திரையரங்கிற்கு அருகிலுள்ள தனியார் இடத்தில், உரிமையாளரின் அனுமதி பெற்றே, நடிகர் விஜய் நிற்கும் தோற்றத்தில் அமைந்த 60 அடி உயர பிரம்மாண்ட பேனர், பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நிறுவப்பட்டிருந்தது.

ஆனால், அந்த பேனர் காவல்துறை அனுமதி இன்றி வைக்கப்பட்டதாக கூறி, சாத்தான்குளம் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய அதிகாரிகள் 10-க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து, கயிறுகள் மூலம் அந்த 60 அடி உயர பேனரை கீழே இறக்கினர்.

இதனிடையே, பேனரை அகற்றும் பணியில் அதிர்ச்சி தரும் சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. தீயணைப்பு துறையினர் தாங்களே மேலே ஏறி பேனரை அகற்றுவதற்கு பதிலாக, இரண்டு சிறுவர்களை 60 அடி உயர கம்பத்தின் மீது ஏறச் செய்து, மிகுந்த ஆபத்தான முறையில் பேனரை கீழே இறக்க வைத்ததாக கூறப்படுகிறது.

அந்த நேரத்தில், தீயணைப்பு பணியாளர்கள் கீழே பாதுகாப்பாக நின்றிருந்தனர்.இந்த சம்பவம், குழந்தைகளின் பாதுகாப்பை அலட்சியப்படுத்தியதாக கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளதுடன், சாத்தான்குளம் பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tension Sathankulam ahead Jananaayagan release Controversy over removal 60 foot Vijay banner


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->