ரன்யா ராவ் தங்கக்கடத்தல் கேஸ்:ரன்யா ராவ் மீது 2,200 பக்க குற்றப்பத்திரிகை...! - Seithipunal
Seithipunal


துபாயிலிருந்து தங்கம் கடத்தல் சர்ச்சையில் சிக்கி கடந்த மார்ச் 3-ஆம் தேதி கைது செய்யப்பட்ட நடிகை ரன்யா ராவ் மீதான விசாரணை பெரிய திருப்பத்தை எடுத்துள்ளது. விமானத்தில் மறைத்து வந்த 14 கிலோ தங்கத்தை வருவாய் புலனாய்வு இயக்ககம் (DRI) பறிமுதல் செய்த பின்னர், இந்த வழக்கு நாடு முழுவதும் கவனம் பெற்றது.கூடுதல் டி.ஜி.பி. ராமசந்திர ராவின் வளர்ப்பு மகளான ரன்யா ராவ், தங்கத்தை கடத்தி வந்தபோது, சில போலீசார் நேரடியாக விமான நிலையத்திலிருந்து வீட்டுக்கு பாதுகாப்பாக அழைத்துச் சென்றதாக விசாரணையில் வெளிச்சம் பெற்றது.

இதனையடுத்து, ரன்யா ராவ் மட்டுமின்றி, அவரின் காதலனும் தெலுங்கு நடிகருமான தருண், மேலும் தங்கத்தை வாங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஜெயின் மற்றும் பரத்குமார் ஆகியோரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். ரன்யா ராவ் மீது காபிபோசா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், குறைந்தது ஒரு வருடத்திற்கு அவளால் ஜாமின் பெற முடியாத நிலை உள்ளது.

தற்போது DRI அதிகாரிகள் இந்த வழக்கில் மாபெரும் 2,200 பக்க குற்றப்பத்திரிகையை பெங்களூரு பொருளாதார குற்றவியல் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். இதில்:127 கிலோ தங்கம் ரன்யா ராவ் மூலம் கடத்தப்பட்டதாக உறுதி
350 பக்கங்கள் சாட்சிகள் அளித்த வாக்குமூலங்கள்
நான்கு பேருக்குள் நடந்த வங்கி பரிமாற்றங்கள்,
அடிக்கடி துபாய்க்கு சென்ற விமான டிக்கெட் விவரங்கள்,
நிதி சீட்டுக்கள், டிஜிட்டல் சாட்சிகள் உள்ளிட்டவை சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த மிகப்பெரிய தங்கக்கடத்தல் வழக்கு விரைவில் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. இதேசமயம், அமலாக்கத்துறை ஏற்கனவே ரன்யா ராவிற்கு சொந்தமான ரூ.34 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கியது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ranya Rao gold smuggling case 2200page chargesheet against Ranya Rao


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->