தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லையா? திமுக, காங்கிரஸ் ஆட்சியை கலைத்துவிடுங்கள் - பாஜக பதிலடி!
EC Issue Congress DMK BJP
பீகாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) நடைமுறையை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. இதன் விளைவாக 50 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
தலைமை தேர்தல் ஆணையர் மீது குற்றம்சாட்டியுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் அதற்கான சான்றுகள் பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும், இல்லையெனில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கு பதிலாக, எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் பதவி நீக்க தீர்மானத்தை கொண்டு வர திட்டமிட்டு வருகின்றன.
இந்த சூழ்நிலையில், பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா கடுமையாக எதிர்க்கட்சிகளை விமர்சித்துள்ளார். தேர்தல் ஆணையம் நியாயமற்றதாக அவர்கள் கருதினால், தாங்கள் ஆளும் மாநிலங்களின் சட்டசபையை கலைக்க வேண்டும் என்றும் அவர் சவால் விட்டார்.
சம்பித் பத்ரா கூறியதாவது:“எதிர்க்கட்சிகள் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தி அரசியல் பலன் பெற முயற்சிக்கின்றன. தேர்தலில் தொடர்ச்சியான தோல்விகள் அவர்களை இந்த நிலைக்கு தள்ளியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதும் அதற்கான வெளிப்பாடுதான். எந்த விலைக்கும் ஆட்சியை காந்தி குடும்பம் கைப்பற்ற வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம்.
வாக்காளர் பட்டியல் தவறானது என்று கூறி மக்களவையை கலைக்க வேண்டும் என வலியுறுத்துகிறார்கள். ஆனால் உண்மையில் தேர்தல் நடைமுறை நியாயமற்றது என நினைத்தால், மேற்கு வங்காளம், தெலுங்கானா, இமாச்சல பிரதேசம் போன்ற எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் சட்டசபையை முதலில் கலைக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
English Summary
EC Issue Congress DMK BJP