ஆம்புலன்ஸ் ஓட்டுநரை மிரட்டிய இ.பி.எஸ்! 'மக்கள் பார்த்து கொண்டு இருக்கிறார்கள் மறந்திடாதீங்க இ.பி.எஸ்' -டி.டி.வி. தினகரன்
EPS threatened ambulance driver People are watching donot forget EPS TTV Dinakaran
தஞ்சை தெற்கு மாவட்ட அ.ம.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று இரவு நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அ.ம.மு.க. துணை பொதுச் செயலாளர் ரெங்கசாமி, தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் ஏழுப்பட்டி பாலு உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் உரையாற்றினார். அவர் கூறியதாவது:
“தேர்தல் கூட்டணி குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம். யாரிடமும் மண்டியிடாத இயக்கம் தான் அ.ம.மு.க. நாம் உண்மையோடு செயல்பட்டு வருகிறோம். அதனால் உறுதியான, சரியான பாதையில் முன்னேறுவோம். வருகிற சட்டசபை தேர்தலில் அ.ம.மு.க. கண்டிப்பாக முத்திரை பதிக்கும். 2026 சட்டமன்ற தேர்தலில் அ.ம.மு.க. வலிமையை தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் உணரும் வகையில் செயல்படுவோம்” என்றார்.
இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த டி.டி.வி. தினகரனிடம், “ஆம்புலன்ஸ் ஓட்டுநரை எடப்பாடி பழனிசாமி மிரட்டியது குறித்து உங்கள் கருத்து என்ன?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்” எனக் குறிப்பிட்டார்.
English Summary
EPS threatened ambulance driver People are watching donot forget EPS TTV Dinakaran