மன்னிப்பு கேளுங்கள் பழனிசாமி! இல்லனா போராட்டம் தான்! நாங்க கண்டிக்கவே இல்லை.. ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் சங்கம் விளக்கம்! - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, வேலூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது ஆம்புலன்ஸ் குறுக்கிட்டதாக கூறி பேசிய வார்த்தைகள் சர்ச்சையை ஏற்படுத்தின. "அடுத்த கூட்டத்தில் இதுபோன்று நடந்தால், ஆம்புலன்ஸ் ஓட்டுநரையே நோயாளி ஆக்கி அதே ஆம்புலன்ஸில் அனுப்பிவிடுவோம்" என்ற அவரது பேச்சு பல்வேறு தரப்பினரின் கண்டனத்துக்கு உள்ளானது.

இதற்கிடையில், தமிழ்நாடு ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் திருச்சி என்ற பெயரில், எடப்பாடி பழனிச்சாமி மன்னிப்பு கேட்காவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்துவோம் என்ற கண்டன அறிக்கை வெளியானது.

ஆனால், இந்த அறிக்கை குறித்து தமிழ்நாடு தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் இன்று (19.08.2025) விளக்கம் அளித்துள்ளது. அதில்,

எங்களது சங்கத்தின் பெயரும், தலைவரின் பெயரும், லெட்டர் பேடும் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளன.எங்களது சங்கம் எந்தவொரு கண்டன அறிக்கையையும் வெளியிடவில்லை.

தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் அரசியல் சாராத அமைப்பாகும்; ஓட்டுநர்கள் நலனுக்காக மட்டுமே செயல்படுகிறது.

போலியான அறிக்கையை வெளியிட்டவர்களுக்கு எதிராக காவல்துறை மூலம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.ஊடகங்கள் இந்த பொய்யான செய்தியை ஒளிபரப்ப வேண்டாம் என்றும், ஏற்கனவே வெளியிட்டிருந்தால் உடனடியாக நீக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறோம்.

இது குறித்து சங்கத்தின் மாநில செயலாளர் முகமது இலியாஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதனால், எடப்பாடி பழனிச்சாமி – ஆம்புலன்ஸ் விவகாரம் தொடர்பான கண்டன அறிக்கை போலியானது என்பது உறுதியாகியுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Apologize Palaniswami Otherwise it a protest We are not condemning at all Ambulance Drivers Association explains


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->