மண்ணுக்கு அடியில் தங்க புதையல் கோட்டை! ஒடிசாவில் டன் கணக்கில் சிக்கிய தங்க சுரங்கங்கள்! வியந்த அதிகாரிகள்!
Gold treasure castle under the ground Tons of gold mines trapped in Odisha Officials amazed
ஒடிசா மாநிலத்தில் 10 முதல் 20 மெட்ரிக் டன் அளவிலான தங்க இருப்புகள் உள்ளனவென இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம் (GSI) கண்டறிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து முதற்கட்டமாக தியோகரில் உள்ள தங்கச் சுரங்கப் பகுதியை ஏலம் விடுவதற்கான நடவடிக்கைகளை ஒடிசா அரசு முன்னெடுத்து வருகிறது.
தங்க இருப்புகள் தியோகர் (அடசா-ராம்பள்ளி), சுந்தர்கர், நவரங்க்பூர், கியோஞ்சர், அங்குல், கோராபுட் ஆகிய மாவட்டங்களில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அதேசமயம் மயூர்பஞ்ச், மல்காங்கிரி, சம்பல்பூர், பௌத் ஆகிய பகுதிகளில் ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த மார்ச் மாதத்தில் சுரங்கத் துறை அமைச்சர் பிபுதி பூஷன் ஜெனா, இந்த தகவலை ஒடிசா சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார்.
இந்த இருப்புகளின் மதிப்பீடு அதிகாரப்பூர்வமாக இன்னும் வெளியிடப்படாத நிலையில், ஆய்வாளர்கள் 10 முதல் 20 மெட்ரிக் டன் வரை தங்கம் இருக்கலாம் எனக் கணித்துள்ளனர். இது இந்தியா வருடத்திற்கு இறக்குமதி செய்யும் சுமார் 700 முதல் 800 மெட்ரிக் டன் தங்கத்துடன் ஒப்பிடும்போது குறைவானதாக இருந்தாலும், நாட்டின் உள்நாட்டு உற்பத்தியை உயர்த்தும் வகையில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தற்போது ஆண்டுக்கு 1.6 டன் மட்டுமே தங்கம் உள்நாட்டில் உற்பத்தியாகி வருகிறது.
ஒடிசாவில் புதிய தங்கச் சுரங்கங்கள் கண்டறியப்பட்டிருப்பது அந்த மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம் தரக்கூடியதாக இருக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர். சுரங்கம், போக்குவரத்து, சேவைத் துறைகள் போன்றவற்றில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். மேலும் சாலைகள், மின்சாரம், நீர் வசதிகள் போன்ற உள்கட்டமைப்பு மேம்பாடு தேவையாகும்.
ஏற்கனவே ஒடிசா மாநிலம் கனிம வளங்களில் முன்னணி இடத்தில் உள்ளது. இந்தியாவின் குரோமைட்டில் 96 சதவீதம், பாக்சைட்டில் 52 சதவீதம், இரும்புத் தாதுவில் 33 சதவீதம் ஒடிசாவில் தான் உள்ளது. இந்நிலையில் தங்கச் சுரங்கங்களின் கண்டுபிடிப்பு, அந்த மாநிலத்தின் சுரங்கத் துறையில் நிலையை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த கட்டமாக தங்கத் தாதுவின் தரம், பிரித்தெடுக்கும் திறன் ஆகியவை மதிப்பிடப்பட வேண்டும். அதன்பின் MMDR சட்டத்தின் வழிகாட்டுதலின்படி வெளிப்படையான சுரங்கத் தொகுதி ஏலங்கள் நடத்தப்பட உள்ளது. இதனுடன் சுற்றுச்சூழல் மற்றும் சமூகத் தாக்க மதிப்பீடுகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary
Gold treasure castle under the ground Tons of gold mines trapped in Odisha Officials amazed