42-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பல்லவன் எக்ஸ்பிரஸ்.!!
pallavan express enter 42nd years
1984-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந்தேதி தமிழக ரெயில்வே சார்பில் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழக ரெயில்வே வரலாற்றில் முக்கிய இடம்பிடித்த இந்த ரெயில் முதலில் சென்னை எழும்பூர் - மதுரை இடையே இயக்கப்பட்டது. அதன் பின்னர் இந்த சேவை திருச்சி வரை குறைக்கப்பட்டு முப்பது வருடங்கள் இயக்கப்பட்டது.
அப்போதைய மத்திய அமைச்சர் பி.சிதம்பரத்தின் முயற்சியால் 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் பல்லவன் எக்ஸ்பிரஸ் காரைக்குடி வரை நீட்டிக்கப்பட்டது. காரைக்குடி, திருச்சி, லால்குடி, விழுப்புரம் உள்ளிட்ட முக்கிய ரெயில் நிலையங்களில் நிற்கும் இந்த ரெயில், தினசரி வேலைக்குச் செல்லும் அலுவலக பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஆகியோருக்கு பெரும் பயனாக உள்ளது.
தமிழக ரெயில்வேயின் பெருமையாக தொடர்ந்து விளங்கும் இந்த பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் 41-வது ஆண்டை நிறைவு செய்து, 42-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இனி வருங்காலங்களில் கூடுதல் வசதிகள், மேம்பட்ட தொழில்நுட்பங்கள் இணைக்கப்பட்டால், இன்னும் பல ஆண்டுகள் இந்த ரெயில் தனது மகத்துவத்தைத் தக்க வைத்துக்கொள்ளும்.
இதேபோன்று, கடந்த ஆகஸ்டு 7-ந்தேதி தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் 49-வது ஆண்டு நிறைவு செய்து, 50-வது ஆண்டிலும், வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகஸ்டு 15-ந்தேதி 47-வது ஆண்டு நிறைவு செய்து, 48-வது ஆண்டிலும் அடியெடுத்து வைத்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
pallavan express enter 42nd years