இனி முதலமைச்சர், அமைச்சர்கள் சிறை சென்றால் 30 நாட்களில் பதவி நீக்கம்.! அரசியல் கட்சிகளுக்கு ஷாக் கொடுக்கும் மத்திய அரசு!
Now if the Chief Minister and ministers go to jail they will be removed from office within 30 days The central government will give a shock to political parties
நாட்டின் அரசியல் துறையில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசு புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
தீவிர குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு 30 நாட்களுக்கு மேல் சிறையில் இருக்கும் பிரதமர், மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் மற்றும் அமைச்சர்கள் தானாகவே பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் எனும் விதமாக இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.
இதற்கான மசோதாவை இன்று (திங்கட்கிழமை) மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் அறிமுகப்படுத்த உள்ளார். பின்னர், அது கூட்டு குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்படும்.
பின்னணி
சமீப காலங்களில் பல்வேறு மாநிலங்களில் அமலாக்கத்துறை (ED) நடத்திய சோதனைகளில், பல முக்கிய அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி
டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநில அமைச்சர்கள்
இவர்கள் அனைவரும் சிறையில் இருந்தபோதும், முதல்வராகவும் அமைச்சராகவும் பல மாதங்கள் பதவி வகித்தனர். பின்னர் தான் ராஜினாமா செய்தனர்.
இந்த நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்திய அரசு புதிய சட்டத்தை கொண்டு வர முடிவு செய்துள்ளது.
புதிய மசோதாவின் முக்கிய அம்சங்கள்
பிரதமர், மத்திய அமைச்சர், மாநில முதல்வர் அல்லது அமைச்சர் தீவிர குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டால்அவர்கள் 30 நாட்கள் தொடர்ந்து சிறையில் இருந்தால் 31-வது நாளில் தானாகவே பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் அல்லது அவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும்.ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் தண்டனை பெறக்கூடிய வழக்குகள் இச்சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளன.யூனியன் பிரதேசங்களுக்கு பொருத்தமான சட்ட ஏற்பாடு இல்லாததால், 1963 சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் எனவும் மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது இத்தகைய சூழலில் பதவி நீக்குவதற்கான சட்ட வழிமுறைகள் இல்லாததால், இந்த புதிய மசோதா மிகப்பெரிய சட்ட மாற்றமாகக் கருதப்படுகிறது.
English Summary
Now if the Chief Minister and ministers go to jail they will be removed from office within 30 days The central government will give a shock to political parties