வாக்குத் திருட்டு முறைகேடு குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் - CM ஸ்டாலின்! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் மூத்த தலைவர் மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து, கர்நாடக மாநிலத்தின் ஒரு தொகுதியில் வாக்காளர் பட்டியலில் பெரிய முறைகேடு நடந்ததாக குற்றஞ்சாட்டினார். அதற்கான ஆதாரங்களையும் அவர் வெளியிட்டார்.

பா.ஜ.க மற்றும் தேர்தல் ஆணையம் இணைந்து இம்மோசடியில் ஈடுபட்டுள்ளதாக ராகுல் காந்தி கூறினார். கடந்த வாரம் டெல்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், கர்நாடகத்தில் ஒரு பெண் வாக்காளர் இரண்டு முறை வாக்களித்ததாகவும் அவர் பரபரப்பான தகவலை வெளியிட்டார்.

இந்த குற்றச்சாட்டுக்கு தொடர்பாக சுயாதீனமான, முழுமையான விசாரணை அவசியம் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி, அதற்கான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டும் என்றார்.

இது குறித்த அவரின் எக்ஸ் பதிவில், "தேர்தல் ஆணையத்தை பாஜக தனது தேர்தல் மோசடி இயந்திரமாக மாற்றியுள்ளது. பெங்களூருவின் மகாதேவபுராவில் நடந்தது நிர்வாகக் குறைபாடு அல்ல, மக்களின் தீர்ப்பைத் திருடுவதற்கான திட்டமிட்ட சதி.

ராகுல் காந்தி கொடுத்துள்ள வாக்குத் திருட்டு சான்றுகள் இந்த மோசடியை அம்பலப்படுத்துகின்றன. இன்று பாராளுமன்ற வளாகத்திலிருந்து தேர்தல் ஆணையம் நோக்கி ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பேரணி நடத்துகிறது. இதில் நாங்கள் சில கோரிக்கைகளை முன்வைக்கிறோம்.

* கணினியால் படித்தறியக் கூடிய வடிவத்தில் அனைத்து மாநிலங்களின் வாக்காளர் பட்டியல் கோப்பும் உடனடியாக அளிக்கப்பட வேண்டும்.

* வாக்குத் திருட்டு முறைகேடு குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இந்தப் போராட்டத்தில் திமுக தோளோடு தோள் நிற்கிறது. பாஜக பட்டப்பகலில் இந்தியாவின் ஜனநாயகத்தைக் கொள்ளையடிப்பதை நாங்கள் அமைதியாக வேடிக்கை பார்க்க மாட்டோம்" என்று தெரிவித்துள்ளார்.

Election commision Rahul Gandhi தேர்தல் ஆணையம் ராகுல்காந்தி முக ஸ்டாலின் mk stalin 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

EC Congress Rahul MK Stalin DMK


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->