டெல்லி தெரு நாய்களை பிடித்து காப்பகத்தில் அடைக்க வேண்டும்...! - கால அவகாசம் விதித்து உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம்
Delhi street dogs should be caught and kept in shelters Supreme Court orders time limit
டெல்லி தலைநகரில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிக அளவில் பெருகிக்கொண்டே வருகிறது. மேலும் அங்கு தெரு நாய்களால், தெருக்களில் நடந்து செல்பவர்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் என அனைவரும் பாதிக்கப்படுகின்றனர்.இது வரை தெரு நாய் கடியால் அதிக பீர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், டெல்லியில் நிறைய பேர் நை கடியால் rabies நோய்க்கு பாதிக்கப்பட்ட நிலையில், தெருநாய்க்கடி சம்பவங்களை தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் விசாரித்தது.இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதி பர்திவாலா மற்றும் மகாதேவன் அமர்வு விசாரித்தது.
நீதிபதிகள்:
அப்போது அவர்கள் தெரிவித்ததாவது,"8 வார கால அவகாசத்திற்குள் தலைநகர் டெல்லியில் சுற்றித் திரியும் அனைத்து தெரு நாய்களையும் பத்திரமாக பிடித்து, நாய்கள் காப்பகங்களில் அடைக்க வேண்டும்" என அதிரடி உத்தரவு பிறப்பித்தனர்.
இதற்கிடையே விலங்கு நல ஆர்வலர்களுக்கு, இதுவரை தெருநாய்க்கடியால் பறிபோன குழந்தைகளின் உயிர்களை விலங்கு நல ஆர்வலர்கள் திருப்பிக் கொண்டு வருவார்களா?
டெல்லியில் தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்கும் நடவடிக்கையை தடுப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை பாயும் என்று உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.
இது தற்போது வரவேற்கத்தக்க விதமாக மாறியுள்ளது என்று மக்கள் பலன் தங்களது கருத்துக்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர்.
English Summary
Delhi street dogs should be caught and kept in shelters Supreme Court orders time limit