கர்நாடகாவில் பரபரப்பு - ஓய்வு பெற்ற பெண் ஊழியரிடம் இருந்து 3 கோடி டிஜிட்டல் மோசடி.!!
3 crores money fraud to rtd women in karnataga
கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூரு பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற பெண் ஊழியர் லெனி பிரபு. இவருடைய செல்போன் எண்ணுக்கு தொடர்ந்து மிஸ்டு கால் வந்து கொண்டிருந்தது. இதையடுத்து லெனி பிரபு அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசிய போது எதிர்பக்கத்தில் பேசிய நபர், தான் சட்ட அமலாக்க அதிகாரி என்றும், உங்களது பெயரில் சீனாவிற்கு அனுப்பப்பட்ட ஒரு பார்சலில் 150 கிராம் எம்.டி.எம்.ஏ. போதை பொருள் இருப்பதாகவும் அதனை நீதிமன்றத்தில் ஒப்படைத்தால் 75 ஆண்டுகளுக்கு மேலான சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றுத் தெரிவித்தார்.

மேலும், இந்த தண்டனையில் இருந்து தப்பிக்க உங்களுக்கு தடையில்லா சான்றிதழை பெற என்னால் உதவ முடியும். அதுவரை உங்களை டிஜிட்டல் கைது செய்துள்ளதாகவும், உங்களை விடுவிக்க வேண்டும் என்றால் பணம் கொடுக்குமாறு மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன லெனி பிரபு முதலில் ரூ.55 லட்சத்தை அந்த நபரின் கணக்கிற்கு அனுப்பினார். இப்படி பல முறை மொத்தம் ரூ.3.09 கோடி அனுப்பியுள்ளார்.
இதையறிந்த அக்கம், பக்கத்தினர் டிஜிட்டல் கைது உங்களை ஏமாற்றி மோசடி கும்பல் பணத்தை பறித்துள்ளனர் என்று தெரிவிக்கவே அதிர்ச்சியடைந்த லெனி பிரபு மங்களூரு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருடப்பட்ட பணத்தை மர்ம நபரின் கணக்கில் இருந்து மீட்டெடுக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
3 crores money fraud to rtd women in karnataga