உதட்டின் நிறத்தை மற்ற சில டிப்ஸ்கள் இதோ....! 
                                    
                                    
                                   Here are some other tips for lip color
 
                                 
                               
                                
                                      
                                            இந்த முறைகளை பயன்படுத்தி கருமையாக உள்ள உதடுகளை பளபளப்பாகவும் இளஞ்சிவப்பாகவும் மாற்றலாம்...
தேங்காய் சீனி, வெண்ணிலா ஸ்க்ரப்:
முதலில்,ஒரு டீஸ்பூன் தேங்காய் சீனியுடன் அரை டீஸ்பூன் தேங்காய் எண்ணை மற்றும் ஒரு சொட்டு வெண்ணிலா சென்ஸ் சேர்த்து கலக்கவும். தேங்காய் எண்ணையில் லாரிக் அமிலம் உதட்டில் வெடிப்புகளை நீக்கும் வெனிலா சென்ஸ் பொலிவைத்தரும்.
ரோஜா இதழ்கள், பால்:
பால் விட்டு ரோஜா இதழ்களை அரைத்து உதட்டில் பூச உதடு மென்மையாவதுடன் ரோஜா நிறமாகும்.

புதினா, சீனி ஸ்க்ரப்:
ஒரு டீஸ்பூன் புதினா ஜுசுடன் அரை டீஸ்பூன் சீனி மற்றும் ஒரு சொட்டு பெப்பர் மிண்ட் ஆயில் சேர்த்து உதட்டில் தடவிக் கழுவ மிகப் பொலிவாக ஆகும்.
தேன், ப்ரௌன் சர்க்கரை ஸ்க்ரப்:
தேன் ஈரப்பதத்தைத்தரும் சர்க்கரை உதட்டை வறண்ட நிலையிலிருந்து மென்மையாக்கும். ஒரு டீஸ்பூன் தேன் மற்றும் ஒரு டீஸ்பூன் ப்ரௌன் சுகரைக் கலந்து உதட்டில் தடவிக் கழுவ உதடு மென்மையாகும்.அவ்வளவுதான் உங்கள் உதடு இனி மினுமினுக்கும் பாருங்கள்.
                                     
                                 
                   
                       English Summary
                       Here are some other tips for lip color