photo எடுக்க முயன்ற சுற்றுலாப் பயணியை தாக்கும் கட்டு யானை...viral video ...! - Seithipunal
Seithipunal


நீலகிரி முதுமலை தமிழ்நாடு-கர்நாடக பாதையில் பந்திப்பூர் புலிகள் காப்பகம் இருக்கிறது. அவ்வழியாக நேற்று ஏராளமான வாகனங்கள் சென்றபோது வனத்திலிருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று சாலையில் வந்தது.அச்சமயம்,அவ்வழியாக கேரட் ஏற்றி சென்ற லாரியை வழிமறித்தது இந்த யானை.

அந்த லாரி ஓட்டுனரும் உடனே வண்டியை நிறுத்திவிட்ட நிலையில், யானை அங்கு நின்றபடியே லாரியிலிருந்த கேரட்டை சாப்பிட்டு கொண்டிருந்தது.அங்கு யானையை பார்த்த அனைத்து வாகனங்களும் சாலையிலேயே நிறுத்தப்பட்டன. அப்போது யானை நிற்பதை பார்த்த சுற்றுலா பயணி ஒருவர் ஆர்வ மிகுதியில் யானை அருகே சென்று புகைப்படம் எடுக்க முயன்றார்.

அப்போது திடீரென யானை சுற்றுலா பயணியை நோக்கி விரட்டி வந்தது. இதனால் யானையிடமிருந்து தப்பிக்க அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.இருப்பினும், யானை விடாமல் துரத்தி வர,அப்போது திடீரென சுற்றுலா பயணி சாலையில் தடுக்கி விழுந்தார். உடனே யானை அவரை தனது காலால் தாக்கியது.

இந்த நடவடிக்கையில்,சுற்றுலா பயணி பலத்த காயமடைந்தார்.இதைக்கண்டு அதிர்ந்துபோன அங்கிருந்த மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

அவர்கள் விரைந்து வந்து யானையை வனத்திற்குள் விரட்டினர்.பிறகு பலத்த காயமடைந்த சுற்றுலா பயணியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.தற்போது சுற்றுலா பயணியை காட்டு யானை தாக்கும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

wild elephant attacks tourist who tried take photo viral video


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->