இந்த டேஸ்ட்டுக்கு இறால் பிரியாணி எங்கேயும் செஞ்சு கொடுக்க முடியாது...! ட்ரை பண்ணி பாருங்க...
prawn biriyani
இறால் பிரியாணி
தேவையான பொருட்கள்:
பொருள் - அளவு
பாசுமதி அரிசி - 4 கப்
இறால் - கால் கிலோ
வெங்காயம் - 3
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 4
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 3 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
கொத்தமல்லித் தழை - 1 கைப்பிடி
உப்பு - தேவைக்கேற்ப
பட்டை, கிராம்பு, சோம்பு - 2 துண்டுகள்
பிரிஞ்சி இலை - 2

செய்முறை :
முதலில்,இறாலை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும்.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு பொhpந்ததும் பட்டை, கிராம்பு, பிhpஞ்சி இலை, சோம்பு சேர்த்து தாளிக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும்.
இதனுடன் இஞ்சி பூண்டு விழுது, கொத்தமல்லித் தழையை சேர்த்து வதக்கவும்.வதக்கிய கலவையுடன் சுத்தம் செய்த இறாலை சேர்த்து வதக்கி, 5 நிமிடம் கழித்து பாசுமதி அhpசியை சேர்த்து கிளறவும். பிறகு 9 கப் தண்ணீர் சேர்த்து, குக்காpல் வைத்து 3 விசில் வந்ததும் இறக்கவும். இப்போது சுவையான இறால் பிhpயாணி ரெடி.