வரதட்சணை என்ற பெயரில் பெண்கள் இன்றும் கொடுமைகளை எதிர்கொள்கிறார்கள்! - நடிகை பாமா - Seithipunal
Seithipunal


அண்மையில் ''நடிகை பாமா'' அளித்த பெட்டியில் வரதட்சணை குறித்து அவர் தெரிவித்ததாவது,"குடும்பம் என்பது ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் தேவை. அப்படி இருக்கும் போது திருமணத்திற்கு எதற்காக வரதட்சணை கொடுக்க வேண்டும். எந்த பெண்ணும் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

இதில் சட்டபூர்வமாக வரதட்சணை தடை செய்யப்பட்டிருந்தாலும் அதன் பெயரால் பெண்கள் இன்றும் கொடுமைகளை எதிர்கொள்கிறார்கள். மேலும் பெண்கள் நன்றாக படித்து பணிக்கு செல்ல வேண்டும்.

இதில் படிக்க இயலாதவர்கள் உடல் உழைப்புக்கேற்ற பணியினை செய்ய வேண்டும். குறிப்பாக பெண்கள் விரும்பினால் மட்டுமே திருமணம் செய்து கொள்ள வேண்டும்.

பெண்களின் பணம் அவரது சொந்த நலனுக்காக மட்டுமே இருக்க வேண்டும்.அந்த காலம் போல், சமைத்து வீட்டை கவனித்துக் கொள்ள மட்டும் திருமணம் செய்ய கூடாது.

கணவர் தோல்வியடையும் போது சொந்த துணையை தவிர வேறு யார் அவரை ஆதரிக்க வருவார்கள். அதற்காக நான் ஆண்களுக்கு எதிரானவர் அல்ல" என்று தெரிவித்திருந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Women still face atrocities name dowry Actress Bama


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->