ரூ.2,000 கோடி... அரசு வருவாயை பங்கு போடுகிறார்கள்... கண்டித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியை சேர்ந்த மாற்றுத்திறனாளி தினேஷ்குமார், சென்னை உய்ரநீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், 2018ல் மாவட்ட கனிம நிதி அறக்கட்டளையில் கணக்காளராக சேர்ந்த அவர், 2022ல் உதவி இயக்குனராக வந்த மாரியம்மாள், அவரை நீக்கி உதவியாளராக மாற்றியதாக குற்றம்சாட்டினார்.

மாரியம்மாளின் உத்தரவுப்படி குவாரி உரிமையாளர்கள் வங்கி கணக்கில் செலுத்திய லஞ்சப்பணத்தை எடுத்துத் தருவதாகவும், பின்னர் முறைகேடுகளுக்குத் தானே காரணம் என சாட்டப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இதனால் கொலை மிரட்டல் ஏற்பட்டதால், தாய்-மகன் இருவரும் தற்கொலைக்கு முயன்றதாகவும், போலீஸ் பாதுகாப்பு கோரினார்.

இதற்க்கு அரசு தரப்பு வழக்கறிஞர், தினேஷ்குமார் தனிப்பட்ட பலனுக்காகவே இந்த வழக்கு தாக்கல் செய்ததாகவும், ஆவணங்கள் புனையப்பட்டவை எனவும் வாதாடினார்.

மனுதாரர் தரப்பில், மாரியம்மாள் லஞ்ச வழக்கில் சிக்கியும் மூன்று மாதத்தில் மீண்டும் அதே பதவியில் நியமிக்கப்பட்டார், கேரளாவுக்கு ரூ.2,000 கோடி மதிப்புள்ள கனிம வளங்கள் சட்டவிரோதமாக கடத்தப்பட்டதாகவும் கூறினார்.

இதனையடுத்து நீதிபதி புகழேந்தி அவர்கள், கனிம வள அதிகாரிகள் கூட்டம் நடத்துவதே ஒவ்வொரு மாதமும் எவ்வளவு வருமானம் வருகிறது? அதை எப்படி பிரித்துக் கொள்வது என்பதற்காகத் தான் என்று கண்டித்த நீதிபதி, இவர்களின் இந்த தவறான நடவடிக்கையால் அதிகாரிகளும், குவாரி உரிமையாளர்களும் அரசுக்கு சேர வேண்டிய வருவாயை பங்கு போட்டுக் கொள்ளும் நிலை உள்ளது என்று வேதனை தெரிவித்தார். 

மேலும், தினேஷ்குமார் வங்கி கணக்கில் வந்த பணம் எதற்காக? யார் ஆதாயம் அடைந்தார்கள்? என்பதைக் அம்பாத்துரை காவல் ஆய்வாளர் நேர்மையாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

தவறினால், சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்படும் என்றும், நேர்மையான விசாரணை மூலம் குறைந்தது ரூ.1,000 கோடி வருவாயை அரசுக்கு ஈட்டித் தர முடியும் என்றும் தெரிவித்தார். இந்த வழக்கு விசாரணை ஆகஸ்ட் 22க்கு ஒத்திவைக்கப்பட்டது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

HC Madurai Bench Condemn to TN Govt


கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?



Advertisement

கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?




Seithipunal
--> -->