எல்.கே. சுதீஷ் பகிர்ந்த photo -க்கு விளக்கம் கொடுத்த பிரேமலதா விஜயகாந்த்...!
Premalatha Vijayakanth gave explanation photo shared by LK Sutheesh
தே.மு.தி.க. பொருளாளர் எல்.கே. சுதீஷ் தனது முகநூலில்,முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா இருவரும் ஒரே pose -ல் நிற்பது போன்ற படத்தை வெளியிட்டது வைரலான நிலையில் பரபரப்பை ஏற்படுத்தியது.இதுகுறித்து பிரேமலதா விஜயகாந்த் தற்போது விளக்கம் கொடுத்துள்ளார்.

பிரேமலதா:
அவர் தெரிவித்ததாவது,"பொதுச் செயலாளராக அம்மா ஜெயலலிதா இங்கே ஒரு சிங்கப் பெண்ணாக இருந்தார்கள். அதேபோல் என்னுடைய சகோதரியும் ஒரு கட்சியின் பொதுச் செயலாளராக கட்சியில் முழுயைாக ஈடுபட்டு சிங்க பெண்மணியாக இருக்கிறார் என சுதீஷ் தெரிவித்தார்.
இது தற்போது சமூக வலைத்தள்தில் ஜெயலலிதா மற்றும் என்னுடைய போட்டோவை எடிட் செய்து யாரோ ஒருவர் வெளியிட்ருக்கிறார். அதை சுதீஷ் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அது வைரலாகியுள்ளது.என்னைத் பொறுத்தவரை, நான் ஏற்கனவே சொன்ன மாதிரி ஒரு சூரியன், ஒரு சந்திரன்தான்.
அதே மாதிரி ஒரு எம்.ஜி.ஆர், ஒரு ஜெயலலிதா, ஒரு கருணாநிதி, ஒரு கேப்டன்தான். அவர்களுடைய இடத்தை இன்னொருவர் வந்து நிரப்ப இயலாது.அதேபோல் ஒரே பிரேமலதா விஜயகாந்துதான். என்னுடைய இடத்தையும் யாராலும் நிரப்ப முடியாது. கேப்டன் இல்லாத போதிலும், அவர் கொடுத்த பயிற்சி, நம்பிக்கை, தைரியம், அந்த உறுதியின் வழியில் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.
ஜெயலலிதா இரும்பு பெண்மணி. முதல்வராக இருந்தவர். சாதனை செய்தவர். எத்தனையோ சவால்களை சந்தித்தவர்கள்.என்னிடம் ஒருமுறை அரசியல் ரோல் மாடல் யார் எனக் கேள்வி கேட்டனர். அதற்கு ஜெயலலிதா எனப் பதில் தெரிவித்தேன்.
இது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி இருப்பதை தவிர வேறு ஒன்றுமே கிடையாது" என்று தெரிவித்துள்ளார்.பல விதமான விமர்சனங்கள் எழுந்த நிலையில் இந்த விளக்கம் தற்போது அதற்கு தீர்வாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
English Summary
Premalatha Vijayakanth gave explanation photo shared by LK Sutheesh