கடும் அமளி - நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்தி வைப்பு.!!
parliment meeting postpond
நாடாளுமன்றத்தில் கடந்த ஜூலை மாதம் 21 ஆம் தேதி மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. அவைத் தொடங்கிய முதல் நாளில் இருந்து ஆபரேஷன் சிந்தூர், பஹல்காம் தாக்குதல், பிகார் வாக்காளர் சிறப்பு திருத்தம் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து உடனடியாக விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டு வந்தனர்.
அதன் படி ஆபரேஷன் சிந்தூர், பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதம் நடத்தப்பட்ட நிலையில், பிகார் வாக்காளர் சிறப்பு திருத்தம் குறித்து உடனடியாக விவாதிக்கக் கோரி ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸை எம்பிக்கள் தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில், நான்காவது வாரத்தின் முதல் நாளான இன்று வாக்குத் திருட்டு குறித்து ராகுல் காந்தி எழுப்பிய குற்றச்சாட்டை விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கியிருந்தனர்.
ஆனால், இரு அவைத் தலைவர்களும் அனுமதி மறுத்ததால் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபடத் தொடங்கினர். இதனால் கோபம் அடைந்த சபாநாயகர் ஓம் பிர்லா, தொடர்ந்து 14வது நாளாக அவை நடவடிக்கைகள் பாதிக்கப்படுகின்றன.
மக்களின் வரிப்பணம் வீணாகிறது. உறுப்பினர்கள் அவை நடவடிக்கைக்கு இடையூறு செய்யக்கூடாது என்று வலியுறுத்தியும், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதனால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.
English Summary
parliment meeting postpond