திருமாவளவனுக்கு சொரணை உள்ளதா? மக்கள் கேட்பதாக சொல்கிறார் பாஜக நாராயணன்!
BJP Narayanan vck thirumavalavan
"பாஜக வினருக்கு உண்மையிலேயே சொரணை இருந்தால், தன்னுடைய கொள்கை எதிரி பாஜக என அறிவித்துள்ள விஜய்யிடம் வலிந்து உறவாட முயற்சி செய்ய மாட்டார்கள் என விசிக திருமாவளவன் விமர்சனம் செய்திருந்தார்.
இந்நிலையில் இதற்க்கு பதிலடி கொடுத்து பாரதிய ஜனதா கட்சி தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "தமிழ் மீனவர்கள் ஆயிரம் பேரை கொன்று குவித்ததை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த, இலங்கையில் இன அழிப்புக்கு சற்றும் குறையாத படுகொலைகளை அரங்கேற்றுவதற்கு துணை நின்ற காங்கிரஸ் கட்சியோடு, கொஞ்சம் கூட வெட்கம், மானம், சூடு, சொரணையில்லாமல் கூட்டணி வைத்ததோடு,
வேங்கை வயலில் குடிநீரில் மலம் கலந்த விவகாரத்தில் மௌனம் காத்ததோடு இன்னும் திமுக வோடு உறவை, கூட்டணியை தொடர்ந்து கொண்டிருக்கின்ற திருமாவளவன் அவர்களே,
41 தமிழர்கள் உயிரிழந்த கரூர் விவகாரத்தில் பொறுப்பேற்க வேண்டிய அரசின் கையாலாகாத்தனத்தை விமர்சனம் செய்வதை விஜய்க்கு ஆதரவு என்று திசை திருப்பி விடும் உங்களுக்கு சொரணை உள்ளதா என்று தான் மக்கள் கேட்கிறார்கள்" என்று பதிலடி கொடுத்துள்ளார்.
English Summary
BJP Narayanan vck thirumavalavan