பரபரப்பு!விஜயகாந்த், வைகோ செய்த தவறை நான் ஒருபோதும் செய்ய மாட்டேன்...! நாதக தனது தனித்துவத்தை ஒருபோதும் இழக்காது...!- சீமான்
never make mistake that Vijayakanth and Vaiko did hero never lose his uniqueness Seeman
சென்னையின் புகழ் பெற்ற ஆயிரம் விளக்கில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் ''சீமான்'' அவர்கள் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.இந்நிலையில் தேர்தல் குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டது.

சீமான்:
அப்போது அவர் பதிலளித்ததாவது ,"வாக்கை பற்றி கவலைப்படுகிற ஒருவன் மக்களின் வாழ்க்கையை பற்றி சிந்திக்க மாட்டான். ஓட்டை குறிவைத்து வேலை செய்பவன் நாட்டை பற்றி கவலைப்பட மாட்டான். இங்கு சாதி, மதம், கடவுளை பற்றி சிந்திப்பவன் மக்களை பற்றி சிந்திக்க மாட்டான்.
மேலும்,மக்களை பற்றி சிந்திப்பவன்; மக்களை பற்றி கவலைப்படுபவன் சாதி, மதம், கடவுளை பற்றி சிந்திக்க அவனுக்கு நேரமும் இருக்காது; தேவையும் இருக்காது.நாம் தமிழர் கட்சியை ஏதேனும் ஒரு கூட்டணியில் சேர்க்க வாக்குகள் குறையும் என வதந்தி பரப்புகிறார்கள். இதில் விஜய் வருகையால் எங்களுக்கு வாக்குகள் குறையும் என தவறான தகவல்களை பரப்புகிறார்கள்.
இதனால் நான் பயந்து, கூட்டணிக்குப் போய்விடுவேன் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால் வருகிற 2026 சட்டசபை தேர்தலில் நாதக தனித்து மட்டுமே போட்டியிடும். தேர்தலில் தோற்று செத்து சாம்பல் ஆனாலும் கூட, நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும்.எந்த கூட்டணியில் இணைந்து நாதக தனது தனித்துவத்தை ஒருபோது இழக்காது.
அரசியலில் விஜயகாந்த், வைகோ செய்த தவறை நான் ஒருபோது செய்யமாட்டேன். நாம் மக்களுக்கு ஆனவன்; எனது வெற்றியையும், தோல்வியையும் என் மக்கள் தான் தீர்மானிப்பார்கள். நாம் தமிழர் கட்சிக்கு கூட்டணியே எப்போதும் தேவையில்லை" என்று தெரிவித்தார்.இதற்கு சீமான் செய்தியாளர்கள் சந்திப்பில் உடனிருந்தவர்கள் கோஷமிட்டு ஆதரவு தெரிவித்தனர்.
English Summary
never make mistake that Vijayakanth and Vaiko did hero never lose his uniqueness Seeman