உபேந்திரா நடிக்கும் புதிய படம்... ஜோடியாக பிரபல நடிகையின் மகள்...!
Upendras new film starring famous actress daughter
நடிகரும் இயக்குனருமான ''உபேந்திரா'' அவர்கள் கன்னட திரையுலகில் நடிகர் மற்றும் இயக்குனர் என இரண்டு துறைகளிலும் கலக்கிவருகிறார்.

மேலும் கன்னட மொழியைத் தண்டி தமிழ், தெலுங்கு என மற்ற மொழிகளிலும் ஆர்வம் காட்டிவருகிறார்.இதில் தற்போது ரஜினியின் ''கூலி'' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற 14ந் தேதி வெளியாக இருக்கிறது.
இதனிடையே, நடிகர் ''உபேந்திரா'' பிரபல இயக்குனர் ''அரவிந்த் கவுசிக்'' இயக்கத்தில் உருவாகும் ''நெக்ஸ்ட் லெவல்'' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இதில் கதாநாயகியாக, பல மொழிகளில் நடித்து புகழ் பெற்ற நடிகை மலர்ஸ்ரீயின் மகளான ''ஆராதனா'' நடிக்க இருக்கிறார்.இப்படத்தை தருண் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் தருண் சிவப்பா தயாரிக்கிறார்.
இப்படத்தின் தொடக்க விழா ஐதராபாத்தில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இதில் இந்தி பட பிரபலங்கள் கலந்துகொள்கின்றனர்.
English Summary
Upendras new film starring famous actress daughter