எம்.பிக்கள் சென்ற விமானம் நடுவழியில் தரையிறக்கம் - நடந்தது என்ன?
air india flight emergency landing for engine issue
எம்.பிக்கள் சென்ற விமானம் நடு வழியில் இயந்திர கோளாறு காரணமாக தரையிறக்கம் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து ஐந்து எம்.பி.க்கள் உட்பட 150 பயணிகளுடன் ஏர் இந்தியா பயணிகள் விமானம் டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றது. இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, இந்த விமானம் நேற்று இரவு சென்னையில் அவசரமாக தரையிறங்கியது. இயந்திரக் கோளாறை விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து உடனடியாக, விமானத்தை தரையிறக்கியதால் பயணிகள் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர்.
பின்னர், மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு, அந்த விமானத்தின் மூலம் பயணிகள் நள்ளிரவு 12.30 மணிக்கு மேல் டெல்லிக்கு அனுப்பப்பட்டனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
air india flight emergency landing for engine issue