பஞ்சமி நிலம்! ஆதி முதல் தோண்டி திமுகவை திணறவைக்கும் டாக்டர் ராமதாஸ்! விழிபிதுங்கும் ஸ்டாலின்!  - Seithipunal
Seithipunal


முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலம் தான் என டாக்டர் ராமதாஸ் கூறியதை அடுத்து, அது தொடர்பான மோதல் ஆனது நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலம் என நிரூபிக்க முடியுமா என ஸ்டாலின், ராமதாசுக்கு சவால் விட, அவர் பதிலுக்கு அடுக்கடுக்கான கேள்வி கணைகளை தொடுத்துள்ளார். இந்த கேள்விகளுக்கு திமுக பதிலளிக்குமானல் முரசொலி அலுவலகம் தொடர்பான சந்தேகங்கள் தீர்ந்துவிடும். 

டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகள், "முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் இல்லை என்பதை நிரூபிக்க 1985-ஆம் ஆண்டு வாங்கப்பட்ட பட்டாவை ஆதாரமாகக் காட்டியிருக்கிறார் மு.க.ஸ்டாலின்.  இதற்கு காட்ட வேண்டிய ஆதாரம் நிலப் பதிவு ஆவணமும், மூல ஆவணங்களும். அவை எங்கே? நில உரிமையாளரிடமே ஆவணங்கள் இல்லையா?
                             
முரசொலி அலுவலகம் கட்டப்பட்டது எப்போது? அதற்கான இடம் வாங்கப்பட்டது எப்போது?  அவற்றை விடுத்து 1985-ஆம் ஆண்டின் பட்டாவை ஸ்டாலின் காட்டுகிறார் என்றால்,  இடையில் உள்ள சுமார் 20 ஆண்டுகள் மறைக்கப்படுவது ஏன்? அதன் மர்மம் என்ன?
                   
முரசொலி அலுவலகம் உள்ள இடத்தில் அதற்கு முன் அரசு ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதி இருந்தது உண்மை விளம்பி ஸ்டாலினுக்கு தெரியுமா? முரசொலி இடம் வழிவழியாக தனியாருக்கு சொந்தமான மனை என்கிறார் ஸ்டாலின். அப்படியானால் அங்கு அரசு ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதி எப்படி வந்தது?
                        
நிலம் அபகரிப்பு திமுகவினருக்கு முழு நேரத் தொழில் தானே? அனாதை இல்லம் என்ற பெயரில் அண்ணா அறிவாலயம் கட்டுவதில் நடந்த மோசடிகள் தொடர்பாக 2004-ல் அதிமுக ஆட்சியில் அனுப்பப்பட்ட அறிவிக்கையை 2007-ல் திமுக ஆட்சியில் தங்களுக்குத் தாங்களே ரத்து செய்து கொண்ட  நியாயவான்கள் தானே திமுக தலைமை!" என பதிவிட்டுள்ளார். 

இந்த கேள்விகளுக்கெல்லாம் திமுக தலைவர் ஸ்டாலின் பதிலளிப்பாரா என்பதே தற்போதைய அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss replies to stalin about murasoli office


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->