கடைசி மூச்சு வரை பாமக வளர்ச்சிக்காக அரும்பாடுபட்ட சுந்தரம்பள்ளி இராஜாராம் மறைவு - மருத்துவர் இராமதாஸ் இரங்கல்! - Seithipunal
Seithipunal



தனது கடைசி மூச்சு வரை பாமக வளர்ச்சிக்காக அரும்பாடுபட்ட சுந்தரம்பள்ளி இராஜாராம் மறைவுக்கு, பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்

தர்மபுரி கிழக்கு மாவட்டம், மொரப்பூர் ஒன்றியம், சுந்தரம்பள்ளி கிராமத்தை சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் மாணவரணி முன்னாள் ஒன்றிய செயலாளர்  இராஜாராம் உடல்நலக் குறைவால்  இன்று காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

சுந்தரம்ப்பள்ளி இராஜாராம் அவரது இளம் வயதிலேயே பாட்டாளி மக்கள் கட்சியில் இணைந்து  கட்சி வளர்ச்சிக்காக உழைக்கத் தொடங்கினார். அவரது கடைசி மூச்சு வரை பா.ம.க வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டார். என் மீது மிகுந்த பற்றும், மரியாதையும் கொண்டவர். கட்சிக்காக போராட்டம் நடத்தி தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் சிறைக்கு சென்றவர். அரசியலில் உயர்ந்த இடங்களை அடைவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் இளம் வயதில் அவர் காலமானதை ஏற்க முடியவில்லை.

இராஜாராமை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், பா.ம.க.வினர் உள்ளிட்ட அனைவருக்கும்  எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dr Ramadoss Mourning to sundarampillai Rajaram Death


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->