தமிழர்களின் உரிமையை ஆந்திராவுக்கு தாரைவார்த்த தமிழக அரசு - மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கொந்தளிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு பள்ளி பாடநூல்களை அச்சிடும் ஒப்பந்தத்தை தமிழக அச்சகங்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்று, முன்னாள் மத்திய அமைச்சரும், பாமக இளைஞரணி தலைவருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்திற்கான பாடநூல்களில்  50 விழுக்காட்டை அச்சிடும் ஒப்பந்தம் வெளிமாநில அச்சகங்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவும்,  முதல் ஆர்டர் ஆந்திர அச்சகத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அச்சிடுவோர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. 

இது உண்மையாக  இருந்தால் அரசின் செயல் தவறானது!

தமிழ்நாட்டில் உள்ள அச்சகங்கள் போதிய பணி இல்லாததால் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கு கூட வழியில்லாமல் வாடிக் கொண்டிருக்கின்றன. அவற்றை வாழ வைக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. அதை செய்யாமல் அண்டை மாநிலங்களின் அச்சகங்களுக்கு பணி வழங்குவது நியாயமல்ல!

ஆந்திரம், தெலுங்கானம், கர்நாடகம், கேரளம் ஆகிய அனைத்து மாநிலங்களுக்கும் தங்களுக்குத் தேவையான பாடநூல்களை சொந்த மாநிலத்தில் தான் அச்சடிக்கின்றன; பிற மாநிலங்களுக்கு வழங்குவதில்லை. அதேபோல் தமிழக அரசும் தமிழக அச்சகங்களின் நலனை மட்டும் காக்க வேண்டும்" என்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumani Ramadoss Say About TNGovt extends Tamil rights to Andhra Pradesh


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->