நேர்மையாக தேர்தல் நடக்காது.. திமுக எழுதிய பரபரப்பு கடிதம்..!! - Seithipunal
Seithipunal


மத்திய பாஜக அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் நாடு முழுவதும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களை நடத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைத்து அந்த குழு செயல்படவும் தொடங்கியுள்ளது.

நாடு முழுவதும் உள்ள பொதுமக்கள் அரசியல் கட்சி பிரமுகர்கள் என அனைத்து தரப்பு மக்களும் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து தங்கள் கருத்துக்களை தெரிவிக்குமாறு ஏற்கனவே அறிவித்திருந்தது.

அதன் அடிப்படையில் திமுக உயர் மட்ட குழுவிற்கு கடிதம் எழுதியுள்ளது அந்த கடிதத்தில் ஒரே நேரத்தில் தேர்தல் என்பதை ஏற்றால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றங்கள் முன்கூட்டியே கலைக்க நேரிடும் அரசியல் சட்டம் சுயாட்சி தத்துவத்திற்கு எதிராக ஒன்றிய மாநில உறவை மட்டும் இன்றி ஒன்றியத்திற்கும் பாதகமாக விளைவுகளை திட்டம் ஏற்படுத்தும்.

அதிகார வரம்பற்ற விசாரணை நடத்தும் உயர்நிலைக் குழு அதிகார பசி கொண்டு ஒன்றிய பாஜக அரசுக்கு துணை போகாமல் விசாரணையை நிறுத்த வேண்டும்.

நாடாளுமன்றம், சட்டமன்றம், நகராட்சி பஞ்சாயத்து ஆகியவற்றிற்கு ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற நடைமுறையை மிகவும் கடுமையாக எதிர்க்கிறது. ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட உயர்மட்ட குழு சட்டவிரோதமானது. அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டது.

நாடாளுமன்றம் சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியமற்றது. ஒரே நாடு ஒரே தேர்தல் முறை அரசியலமைப்பின் அடிப்படை அம்சத்திற்கு எதிரானது அரசியல் சட்டம் கூறும் சுதந்திரமான நேர்மையான தேர்தல் நடத்த ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் உதவாது" என திமுக கடிதம் எழுதியுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK wrote letter against one nation one election


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->