காலம் காலமாக.. நீட் எதிர்ப்பே திமுகவின் நிலைப்பாடு! சீமானுக்கு திமுக பதிலடி!! - Seithipunal
Seithipunal


நீட் தேர்வை திமுக தொடர்ந்து எதிர்த்து வரும் நிலையில் கடந்த அக்டோபர் 21ஆம் தேதி திமுக சார்பில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நீட விலக்கு நம் இலக்கு எனும் தலைப்பில் கையெழுத்து இயக்கத்தை திமுக தொடங்கியுள்ளது. 

50 நாட்களில் 50 லட்சம் பேரிடம் நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து பெறும் வகையில் தொடங்கப்பட்டுள்ள இந்த இயக்கத்தை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதற்கு ஒரு தரப்பினர் வரவேற்கும், மற்றொரு தரப்பினர் விமர்சனமும் செய்து வருகின்றனர் .

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திமுக தொடங்கியுள்ள நீட் எதிர்ப்பு இயக்கத்தை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைச்சர் மனோ தங்கராஜ் எதற்கெடுத்தாலும் திமுகவை குற்றம் சொல்பவர்களை திருத்தவே முடியாது. நீட் எதிர்ப்பு என்பது திமுகவின் காலம் காலமான நிலைபாடு. 

வட இந்திய மாணவர்களும் நீட் தேர்வால் உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவங்களை புரிந்து கொண்டு சீமான் பேச வேண்டும். எல்லாரும் சமத்துவமாக சமமாக வாழ வேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடு என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK response seeman comment on neet exam


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->