கர்நாடக காவிரி நீரை தருதோ! இல்லையோ! நாம் போராடுவது போல நடிக்கனும்! திமுக நிர்வாகியின் வீடியோ வைரல்!! - Seithipunal
Seithipunal


தமிழகத்திற்கு சேர வேண்டிய காவிரி பங்கு நீரை திறந்துவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டதை செயல்படுத்த கர்நாடகா அரசு மறுப்பு தெரிவித்து வருகிறது. மேலும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கு எதிராக கர்நாடக மாநில விவசாயிகள் போராடிய நிலையில் தமிழக விவசாயிகளும் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் இரு மாநில அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ள இந்த சூழலில் எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலை கருத்தில் கொண்டு காவிரி விவகாரத்தில் போராடுவது போல நடிக்க வேண்டும் என திமுக மாவட்ட துணைச் செயலாளர் ஞானவேலன் கட்சியின் நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. 

கர்நாடக அணையில் இருந்து நீர் திறக்கப்படாததாலும், நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததாலும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக திறக்கப்பட்ட நீர் நிறுத்தப்பட்டதால் விவசாயிகள் வேதனை இருந்து வரும் நிலையில் திமுக நிர்வாகிகளின் கூட்டத்தில் அக்கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் இவ்வாறு பேசியுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் திமுக சார்பில் நடைபெற்ற கட்சியின் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய திமுக மாவட்ட துணைச் செயலாளர் ஞானவேலன் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் வெற்றி பெற வேண்டும் என்றால் கர்நாடகாவை எதிர்ப்பது போல தமிழக மக்கள் மத்தியில் மாயை உருவாக்க வேண்டும் என பேசி உள்ளார். 

குறிப்பாக அந்த வீடியோவில் "காங்கிரஸ் கட்சி நடிப்பது போல, நாமும் எதிர்ப்பது போலவும், எடப்பாடியை மட்டம் தட்டுவது போல காட்டி பாஜகவை ஒழிக்க வேண்டும். அதுதான் நம்முடைய கொள்கையாக இருக்க வேண்டும். அந்தக் கொள்கையை உறுதிப்படுத்தினால் தான் வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாம் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற முடியும். தண்ணீர் திறக்கிறார்களோ! இல்லையோ! கர்நாடக காங்கிரசை முழுமையாக எதிர்ப்பது போன்ற மாயை காட்ட வேண்டும்" என பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK official said pretend to oppose Karnataka on Cauvery issue video viral


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->