ஆட்சிக்கு வந்ததும் இதை செய்கிறோம், அதை செய்கிறோம்... யாரை சாடினார் கனிமொழி!
DMK MP Kanimkozhi Attack TVK Vijay
திமுக எம்பி கனிமொழி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தமிழக வெற்றிக் கழகத்தையும் அதன் தலைவரையும் குறிவைத்து தெரிவித்த விமர்சனம் சர்ச்சையாகியுள்ளது.
"அரசியலின் அடிப்படை அறிவு இல்லாதவர்கள் ஆட்சி அமைப்போம் என பேசுவது ஆச்சரியமாக உள்ளது," என்ற கனிமொழி, மக்கள் செல்வாக்கு பெற்றிருப்பதும், அரசியல் அறிவு இருக்கின்றதா என்பதும் வெவ்வேறு விஷயங்கள் என்பதையும் சுட்டிக்காட்டினார்.
மேலும், “ஆட்சிக்கு வந்ததும் இதை செய்கிறோம், அதை செய்கிறோம் என கனவு வாக்குறுதிகளை வாரி வழங்குவதை மக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். இந்த மாதிரியான வாக்குறுதிகள் வழியாக பொதுமக்கள் திசை திருப்பப்படக் கூடாது” என கனிமொழி தெரிவித்துள்ளார்.
மேலும், "மக்களை ஏமாற்ற முயல்வோரை அடையாளம் காண்பது அவசியம். உண்மை நிலையைப் பகிர்வதும், பொய்யான நம்பிக்கைகள் உருவாகாதவாறு விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் நம்முடைய பொறுப்பு,” என்றும் கனிமொழி விமர்சித்துள்ளார்.
இந்த விமர்சனம் யாரை என்று நேரடியாக பெயரைச் சொல்லாமல் போனாலும், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் அரசியல் பயணத்தை சாடும் விதமாகவே அமைந்துள்ளன.
English Summary
DMK MP Kanimkozhi Attack TVK Vijay