தோல்வி பயத்தில் மாணவி தற்கொலை .. 348 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி!
Student commits suicide out of fear of failure Passed with 348 marks
சரியாக தேர்வு எழுதவில்லை என்று மன வேதனையில் தற்கொலை செய்துகொண்ட 10-ம் வகுப்பு மாணவி 348 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் நல்லாக்கவுண்டம்பாளையத்தை சேர்ந்த 40 வயதான கவிதா அங்கன்வாடி மையத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 15 வயதில் கீர்த்திவாசனி என்ற ஒரே மகள் ,பிலிக்கல்பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்துவந்ததுடன், நடந்து முடிந்த எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை எழுதி இருந்தார்.
இந்நிலையில் மாணவி தான் சரியாக தேர்வு எழுதவில்லை என்று மன வேதனையில் இருந்து வந்த கீர்த்திவாசனி நேற்று முன்தினம் வீட்டில் உள்ள மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இந்த நிலையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது.அப்போது இந்த தேர்வில் கீர்த்திவாசனி 348 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்று இருந்தார்.
தமிழ்-70, ஆங்கிலம்-83, கணிதம்-81, அறிவியல்-70, சமூக அறிவியல்-44 என மொத்தம் 348 மதிப்பெண்கள் பெற்றுஇருந்தார். கீர்த்திவாசனி தோல்வி பயத்தால் தற்கொலை செய்து கொண்டநிலையில் அவர் தேர்ச்சி பெற்றது அவரது குடும்பத்தினர், உறவினர்கள் இடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Student commits suicide out of fear of failure Passed with 348 marks