பிரபல இயக்குநரின் மகன் கைது.!!
director gowtham son arrested for accident
அனகாபுத்தூர் பகுதியைச் சேர்ந்த மளிகைக்கடை உரிமையாளர் சண்முகம் நேற்று இரவு அண்ணாநகர் இரண்டாவது நிலச்சாலை அருகே ஆட்டோவில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது இரண்டு பேர் அந்த ஆட்டோ மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இதனை தட்டிக்கேட்ட சண்முகத்தை இருவரும் சராமாரியாகத் தாக்கியுள்ளனர். உடனே சண்முகம், இருவர் மீதும் அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், சண்முகத்தை தாக்கியது இயக்குனர் கவுதமனின் மகன் தமிழழகன் மற்றும் அவரது நண்பர் என்பது தெரிய வந்தது.
மேலும், இருவரும் மதுபோதையில் அவரை தாக்கியது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார், இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் காவல் நிலைய ஜாமீனில் விடுவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
director gowtham son arrested for accident