150-க்கும் அதிகமான திரைகளில் டிடி நெக்ஸ்ட் லெவல்!
DD Next Level in North india
‘டிடி ரிட்டர்ன்ஸ்’ பட வெற்றிக்கு பிறகு, சந்தானம் – பிரேம் ஆனந்த் கூட்டணியில் உருவான புதிய படம் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’. இது இன்று நாடு முழுவதும் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தை நடிகர் ஆர்யா தனது ‘தி ஷோ பீப்புள்’ நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இதில் இயக்குநர்கள் கௌதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வட இந்தியாவில் 150-க்கும் மேற்பட்ட திரைகளில் படம் வெளியாவதோடு, சந்தானம் முதல்முறையாக ஹிந்தி பிரதேசங்களில் ஹீரோவாக அறிமுகமாகும் படம் என்ற வகையிலும் இது குறிப்பிடத்தக்கதாகிறது.
வெளிவந்ததிலிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றுவரும் இப்படம், காமெடி மற்றும் த்ரில்லர் அம்சங்களால் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
இந்தப் படத்தில் இடம்பெற்ற கிசா-47 பாடலில், "கோவிந்தா கோவிந்தா" எனும் வரி ஒரு பிரபல பக்திப் பாடலின் ராகத்தை நினைவுபடுத்தும் வகையில் அமைந்திருந்தது. இது இந்து மத உணர்வுகளை புண்படுத்துகிறது எனக் கூறி சர்ச்சை கிளம்பிய நிலையில், படக்குழு அந்தப் பகுதிகளை நீக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
English Summary
DD Next Level in North india